இலங்கையில் பொருளாதார நெருக்கடில் நிலவி வரும் நிலையில் சமீபத்தில் அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பிரதமர் ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ஆகியோர் தங்கள் பதவியயை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இலங்கைவிட்டு செல்லக்கூடது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையில் புதிய அதிபரைத் தேர்னந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்றம் ஈடுபட்டுள்ளது.
இதற்கான சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இதில்,அதிபர்தேர்தலில் போட்டியிடடுபவர்கள் வரும் 19 ஆம் தேதி தன்னிடம் வேட்பு மனுதாக்கலை சமர்ப்பிக்கலாம் என பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில்,எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரெமதாச, மார்க்க்சிஸ்ட் விமுக்தி பெரமுன த்லைவர் அனுரகுமார, மற்றும் ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடவுள்ளதாகக் அறிவிக்கப்பட்டடுள்ளது.