இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் பணக்காரர்களின் வருமான வரியை உயர்த்த இலங்கை அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து தற்போது இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி இலங்கை ரூபாயில் ரூ.200 கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்களின் வரியை 25 சதவீதமாக உயர்த்த இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.