நாடு முழுவதும் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி போட ஸ்விக்கி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இணைய வழியாக உணவு ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, நாடு முழுவதும் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் தங்களுடைய 2 லட்சம் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த தகவலை ஸ்விக்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தங்களுடைய நிறுவனத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு பொருட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக நிறுவனத்தின் செலவிலேயே தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
வீடுகளுக்குச் சென்று உணவு பொருட்களை வழங்கி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் முதல் கட்டமாக அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஸ்விக்கி நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்