ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியில் இல்லாத காலத்தில் படித்த பட்டங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். முக்கியமாக பெண்களுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தற்போது கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020 வரை தாலிபான்கள் ஆட்சியில் இல்லாதபோது பள்ளிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும் படித்து பெற்ற பட்டங்கள் செல்லாது என அறிவித்துள்ளனர் தாலிபான்கள். இஸ்லாமிய கல்வி நிலையமான மதரசாக்களில் படித்த பட்டம் மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.