அமெரிக்கா அறிவித்தபடி வரும் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என தாலிபான்கள் எச்சரிக்கை.
ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள அமெரிக்கர்கள், இந்தியர்கள் உள்பட அந்நாட்டிலுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால் காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விமான நிலையத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல்தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். பின்னர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.