விவசாய நிலத்தில் திடீரென்று மிகப்பெரிய பள்ளம் தோன்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற பகுதியில் விவசாய நிலம் உள்ளாது. இங்கு சுமார் 300 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இப்பள்ளம் மேலும் பெரிதாகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. இதுகுறித்துப் புவியியலாளர்கள் கூறியதாவது: பூமியில் பாறைகள் குறைவாக உள்ள பகுதியிலும், அங்கு நீரோட்டம் ஏற்பட்டாலும் இப்பள்ளம் தோன்றும் எனத் தெரிவித்துள்ளனர்.