Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 13 ஆயிரம் ரூபாயில் இந்தியா டு அமெரிக்கா: வாவ் விமான சேவையின் அதிரடி திட்டம்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (15:15 IST)
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை விமான டிக்கெட்டுக்கு மட்டும் செலவாகும். அதிலும் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2 லட்சம் செலவாகும். இந்த நிலையில் டெல்லியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வெறும் ரூ.13ஆயிரம் கட்டணத்தில் விமான சேவையை இயக்குகிறது 'வாவ் ஏர்லைன்ஸ்
 
ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த இந்த விமான நிறுவனம், டெல்லியில் இருந்து ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் கெஃப்லாவிக் நகருக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் வகையில் இணைப்பு விமான சேவையை வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இருந்து தினம் சுமார் 20 ஆயிரம் அமெரிக்கா செல்வதாகவும், இவர்களில் 80% பேர் இணைப்பு விமானத்தில் செல்வதாகவும், அவர்களை டார்கெட் செய்வதே எங்களது நோக்கம் என்றும் வாவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்குலி மொகன்சன் தெரிவித்துள்ளார்.
 
வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் வாவ் ஏர்லைன்ஸ் தனது சேவையை இந்தியாவில் தொடங்கவுள்ளதாகவும், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா நாடுகளில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்கள் நிறுவனம் இந்தியாவிலும் நிச்சயம் தனது சேவையை நீட்டித்து ஆசியாவின் ஆதரவை பெறும் என்றும்  ஸ்குலி மொகன்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments