Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வேலை இழந்தவர்களுக்கு மரம் நடும் வேலை வழங்கியுள்ள அரசு !

வேலை இழந்தவர்களுக்கு மரம் நடும் வேலை வழங்கியுள்ள அரசு !
, புதன், 10 ஜூன் 2020 (23:32 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா பல பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த 63,000 க்கும் மேற்பட்டோர் மரம் நடும் பணிகளில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.

அங்கு விவசாயத்திற்காக பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் பஞ்சம் ஏற்பட்டு வெள்ளம் வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே,பிரதமர் இம்ரான் கான்  காடுகளை அதிகரிப்பதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி மரங்கள் நடும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.தற்போது ஊரடங்கு நேரத்தில் அத்திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்ல அரசாணை வெளியீடு !