Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ரஷ்யாவுக்கு ஆரம்பத்திலேயே ஸ்கெட்ச் போட்ட ஐ.எஸ் அமைப்பு.. எச்சரித்த அமெரிக்கா! – பயங்கரவாத சம்பவத்தின் பின்னணி!

IS attack

Prasanth Karthick

, ஞாயிறு, 24 மார்ச் 2024 (09:42 IST)
ரஷ்யாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இசை நிகழ்ச்சி ஒன்றில் தாக்குதல் நடத்திய நிலையில் இதுகுறித்து முன்பே எச்சரித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.



ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள குரோகஸ் சிட்டி ஹால் என்ற அரங்கத்தில் பிரபல இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில் திடீரென அங்கு புகுந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் கண்மூடித்தனமாக அங்கிருந்த மக்களை சுட ஆரம்பித்தனர். மேலும் அந்த அரங்கத்திற்கும் தீ வைத்தனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு, தீ வைத்ததில் மேற்கூரை இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களால் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 133 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 100 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யா மீது ஐஎஸ் நடத்திய தாக்குதல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய 4 ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது.


ஆனால் இந்த தாக்குதல் குறித்து தாங்கள் முன்னதாகவே எச்சரித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள் ஆப்கானிஸ்தானை மையமாக கொண்ட ஐ.எஸ்-கோரசன் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது ரஷ்யாவை தாக்க திட்டமிட்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்கள் ரஷ்யாவில் தீவிர செயல்பாடுகளில் உள்ளனர் என்றும் எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கடந்த 7ம் தேதியே இந்த பயங்கரவாதிகள் குறித்து ரஷ்யாவுக்கு எச்சரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஐ.எஸ் அமைப்பு ஐரோப்பாவில் இவ்வாறான தாக்குதல்களுக்கு திட்டமிட்ட நிலையில் முன்னதாகவே கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன்: சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அதிரடி..!