ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ( 34 வயது) ஒருவர் லாரி ஒன்றில் பயணித்தபோது, பயணிகள் அமரும் பகுதியில் இருந்திருக்கிறார்.
அப்போது, லாரியில் இருந்து தவறி கிழே விழுந்த அவர் மீது விமானம் ஒன்று மோதி, அவரை இழுத்துச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், டாக்சிக்கள் செல்லும் வழியில் கிடந்துள்ளதைப் பார்த்த அவரை சக பணியாளர்கள் மீட்டனர்.
ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர்.
சீன நாட்டில் விமான சேவைக்கான நிறுவனத்தில் பராமரிப்பு மற்றும் அடிமட்ட பணியாளராக அவர் வேலை செய்து வந்ததாக ஹாங்காங் விமான நிலைய கழகம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, 60 வயது ஓட்டுனரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.