சீன நாட்டில் உள்ள ஹார்பின் என்ற இடத்தில் லாரியில் சென்ற ஒரு விமானம் சாலையில் இருந்த பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஹார்பின் என்ற இடத்தில் , பல சக்கர லாரியின் மேல் ஒரு விமானத்தை ஏற்றிச் சென்ற டிரைவர் ஒரு பாலத்தைக் கவனிக்காமல் வாகன ஓட்டினார்.
அதனால் விமானம் உயரமாக இருந்ததால், அந்தப் பாலத்தில் சிக்கிக்கொண்டது. இந்தவிமானத்தை அங்கிருந்து எடுக்க , டிரைவர் லாரியின் சக்கரங்களை கழற்ற முடிவு செய்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதலத்தில் வைரலாகிவருகிறது.
டிரைவரின் கவன குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இருப்பினும் மக்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அந்த நாட்டின் ஜிங்குவா என்ற பத்திரிக்கை கூறியுள்ளதாவது,. டிரைவரின் கவனகுறைவால் இந்த விமானம் பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளது. தற்போது இதை இங்கிருந்து வெளியே எடுக்க முதலில் விமானத்தின் சர்க்கரங்களை கழட்டி பிறகு அதைப் பொருத்திக்கொள்ள தீர்மானித்துள்ளனர்,. ஆனா சக்கரங்களை கழற்றிய பிறகு எப்படி வானத்தை இயக்க முடியும் ? என கேள்வி கேட்டுள்ளது.
மேலும், சமீபத்திய பேரழிவாக இந்த நகைச்சுவை சம்பவத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஒரு முட்டாள் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.