சீனாவில் பிரபல செயலியான டிக்டாக்கை பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே சீனாவில் டிக்டாக் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இங்கிலாந்து நாட்டு அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறியுள்ளதாவது: நாட்டில் அரசு அலுவலங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரவதாக நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் ஆலிவர் தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.