Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அரசுக்கு ஆதரவாக திடீரென செயல்பட்ட டிக்டாக்: 4 லட்சம் வீடியோக்களை நீக்கியதாக தகவல்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (07:49 IST)
இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட ஒருசில நாடுகளில் டிக்டாக்கில் தடை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சமீபத்தில் டிக் டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யாவிட்டால் அந்த செயலியை நாடு முழுவதும் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்த அவகாச கெடு காலமும் நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் டிக்டாக்கில் அமெரிக்க அரசுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 4 லட்சம் வீடியோக்களை டிக் டாக் நிர்வாகிகள் நீக்கியுள்ளனர். அமெரிக்க அரசுடன் இணக்கமாக செல்வதையே டிக் டாக் விரும்புகிறது என்பதை இந்த நடவடிக்கையில் இருந்து தெரியவருகிறது
 
இருப்பினும் டிக் டாக் செயலியை விற்பனை செய்வது குறித்து டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைடான்ஸ் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறப்படுவதால் டிக்டாக்கின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் கடும் போட்டியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments