Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராணுவ பலத்தில் சிறந்த டாப் 10 நாடுகள் இவைதான்!!

Webdunia
புதன், 10 மே 2017 (14:38 IST)
இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள் எவை என குளோபல் பயர்பவர் அமைப்பும், கிரெடிட் சூசேவும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன. அவை...


 
 
அமெரிக்கா:
 
இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 1,40,000 இராணுவ வீரர்கள், 8,848 பீரங்கிகள், 13,892 போர் விமானங்கள், 20 விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள், 72 நீர் மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. 
 
ரஷ்யா: 
 
இரண்டாம் இடம் பெறும், ரஷ்யாவிடம் 7,66,055 இராணுவ வீரர்களும், 15,398 பீரங்கிகளும், 3,429 போர் விமானங்களும், 55 நீர்மூழ்கி போர்க்கப்பல்களும், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் உள்ளன. 
 
சீனா:
 
சீனாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சீனாவிடம் 23,33,000 இராணுவ வீரர்கள் உள்ளனர். மேலும் 9,150 பீரங்கிகள், 2,860 போர் விமானங்கள், 67 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது.
 
இந்தியா:
 
இந்த பட்டியலில் 4 வது இடம் கொடுக்கப்பட்டுள்ள் இந்தியாவிடம் 13,25,000 ராணுவ வீரர்கள், 6,464 பீரங்கிகள், 1,905 போர் விமானங்கள், 15 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.
 
இங்கிலாந்து:
 
இங்கிலாந்திடம் 1,46,980 இராணுவ வீரர்கள், 407 பீரங்கிகள், 936 போர் விமானங்கள், 10 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது.
 
பிரான்ஸ்:
 
6 வது இடத்தில் உள்ள பிரான்ஸிடம் 2,02,761 இராணுவ வீரர்கள், 423 பீரங்கிகள், 1,264 போர் விமானங்கள், 10 நீர்மூழ்கிக் கப்பல்கள், 4 விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளன.
 
தென்கொரியா:
 
தென்கொரியா அருகில் உள்ள வடகொரியாவை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே தனது இராணுவ பலத்தை சிறப்பாக வைத்திருக்கிறது.
 
தென்கொரியாவிடம் 6,24,465 இராணுவ வீரர்களும், 2,381 பீரங்கிகளும், 1,412 போர் விமானங்களும், 13 நீர் மூழ்கி கப்பல்களும் உள்ளன.
 
ஜெர்மனி:
 
இராணுவத்திற்கு மிக குறைவாக செலவிடும் நாடாக ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனி இராணுவத்திடம் 1,79,046 இராணுவ வீரர்களும், 408 பீரங்கிகளும், 663 போர் விமானங்களும், 4 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன.
 
ஜப்பான்: 
 
ஜப்பானிடம் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், 2,47,173 இராணுவ வீரர்கள், 678 பீரங்கிகள், 1,613 போர் விமானங்கள் மற்றும் 16 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன.
 
துருக்கி:
 
கடைசி இடத்தில் துருக்கியிடம் இராணுவ வீரர்களும் 3,778 பீரங்கிகளும், 1,020 போர் விமானங்களும், 13 நீர்மூழ்கி போர்க்கப்பல்களும் உள்ளதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments