எகிப்து நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் தெற்கே ஷோஹாக் மாகாணத்தின் டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்தின் மீட்பு பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து எமர்ஜென்சி பிரேக்கை தவறுதலாக யாரோ இயக்கியதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எகிப்து வட ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.