அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை இனவாதத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளை இனவாதத் தலைவர்களின் சிலையை அகற்றுவதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் வெள்ளை இனவாதத்துக்கு எதிரான மனநிலை உருவாகி உள்ள நிலையில், டிரம்பின் கருத்து சர்ச்சையை வலுவாக்கி உள்ளது.
இது போன்று முன்னர் ஒரு முறை இனவாதத்தை ஆதரித்ததற்கு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், தனது லத்தீன் அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரச்சனையை சுமுகமாக முடிக்க அவசரமாக நாடு திரும்பியிருக்கிறார்.