உலகில் மிகப்பெரிய 5 கோடீஸ்வரர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
உலகில் மிகப்பெரிய கோடீட்ஸ்வரர்களான மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், டெஸ்லான் நிறுவன தலைவர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசாஸ்,வாரன் பஃபெட், மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற சிலருடைய டுவிட்டர் கணக்குகள் நேற்று அதாவது ஜூலை 15 ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அதின்மூலம் பிட் காயின் ஸ்கீம் மூலமாக பணம் அனுப்பினால் 30 நிமிடத்தில் இரு மடங்காக பணம் திரும்ப அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன் பின்னணியில் பிட்காயின் கும்பல் இருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் விசாரித்து வருகிறது.