சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டுவிட்டருக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது 140 கேரக்டருக்கு பதில் 280 கேரக்டராக டுவிட்டரில் மாற்றம் செய்த பின்னர் அதற்கான ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டுவிட்டரில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி நோட்டா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கலிபோர்னியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியவே டுவிட்டரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் டுவிட்டரில் பணியில் சேர்ந்த அந்தோணி நோட்டா, டுவிட்டரில் வளர்ச்சிக்கு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து டுவிட்டரின் வருமானத்தை பெருக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.