டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
முதலாவதாக சி.இ.ஓ உல்பட முக்கிய பணியாளர்களை நீக்கினார் என்பதும் அதன் பிறகு புளூடிக் பயனாளர்களுக்கு 8 டாலர் கட்டணம் நியமனம் செய்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகளை டெலிட் செய்யும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க தற்போது டுவிட்டரில் பேமென்ட் வசதி வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பேஸ்புக் கூகுள் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் தற்போது பேமென்ட் வசதி இருந்து வரும் நிலையில் டுவிட்டர் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்
இதுகுறித்து விளம்பரங்களுடன் எலான் மஸ்க் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. டுவிட்டரில் பேமென்ட் வசதி வந்தால் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது