பூனைகளுக்கும் பரவிய கொரோனா! அமெரிக்கா அதிர்ச்சி
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கானவர்களை தாக்கியும் லட்சக்கணக்கானவர்களை பலிவாங்கியும் வருவது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எச்சரித்து வந்தனர். இந்த எச்சரிக்கை சமீபத்தில் உண்மையானது. ஆம் அமெரிக்காவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் உள்ள புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த இரண்டு பூனைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த பூனைகள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
வீட்டு விலங்குகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவினால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் வனவிலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அரசு விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் ஒளியாகி உள்ளது