ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியவர்களை உக்ரைன் கொண்டு சென்ற விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலீபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து ஏராளமான வெளிநாட்டினரும், உள்நாட்டினருமே தப்பி விமானங்கள் மூலம் வெளியேறி வருகின்றனர். பல நாடுகள் தங்கள் சொத்த மக்களை விமானங்களை அனுப்பி மீட்டு வருகின்றன.
அந்த வகையில் உக்ரைன் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசால் அனுப்பப்பட்ட விமானத்தின் மூலம் மீண்டும் உக்ரைனுக்கு திரும்பி க் கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் ஆயுதமேந்திய கும்பல் நுழைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விமானம் நடுவானில் கடத்தப்பட்டுள்ளதாகவும், அது ஈரான் கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தை கடத்தியது தலீபான்கள் அமைப்பா? அல்லது வேறு பயங்கரவாத அமைப்புகளா? என்பது குறித்த தகவல்கள் தெரிய வரவில்லை.