ஐநாவின் மனித உரிமைக்குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஜெனீவா சென்றிருந்த வைகோவை சிங்களர் கும்பல் ஒன்று தாக்க முயற்சித்ததாக வந்த தகவலை அடுத்து ஐநாவில் பணிபுரியும் தமிழரான ஒரு அதிகாரி, வைகோ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வரை அவரது பாதுகாப்பிற்காக சிறப்பு கமாண்டர் படை ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த சிறப்பு கமாண்டர் படையினர் வைகோவுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரை யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாத்து வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு குறித்து வைகோ கூறியபோது, எந்த ஒரு பாதுகாப்பையும் நம்புபவன் நான் இல்லை. ஒரே ஒரு புல்லட்டை எவ்வளவு பெரிய பாதுகாப்பு இருந்தாலும் ஒருவரை கொல்ல சுட்டுவிட முடியும். எனவே பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. இருந்தும் ஐநா தமிழ் அதிகாரி திருப்திக்காக இந்த பாதுகாப்பை ஏற்றுள்ளேன். எனக்கு எந்த விதத்திலும் மிரட்டல் வந்தாலும் நான் பேச வேண்டிய கருத்துக்களில் இருந்து பின்வாங்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.