அமெரிக்காவில் மயிலை செல்லபிரணானியாக வளர்ந்து வந்த பெண் ஒருவர் விமானத்தலில் மயிலுடன் பயணம் மேற்கொள்ள நினைத்த போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டடுள்ளது.
நியூயார்க் நகரை சேர்ந்தவர் வெண்டிகோ. இவர் செல்லபிரணானியாக மயிலை வளர்த்து வந்துள்ளார். தான் எங்கு சென்றாலும் மயிலை உடன் அழைத்து செல்வது அவரது வழக்கம்.
இந்நிலையில் நியூஜெர்சியில் இருந்து லாஸ் ஏஞ்சலிஸ் செல்வதற்கு மயிலுடன் விமான நிலையம் வந்தார். அப்போது விமானத்தில் பயணிக்க யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மயிலுக்கு அனுமதி மறுத்து விட்டது.
இது குறித்த வெண்டிகோ கூறியதாவது, எனக்கும், மயிலுக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்திருந்த போதும், 6 மணி நேரம் விமான நிலைய அதிகாரிகளுடன் போராடியும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மயிலுடன் செல்ல அனுமதி இல்லை என்ற தகவலை தாங்கள் ஏற்கனவே அவரிடம் தெரிவித்தோம் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.