இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, ராணுவவீரர்கள் மற்றும் குழந்தைகளை கொன்றனர்.
அதன்பின்னர், 240 பேரை பிணைக் கைதிகளாக காஸா முனைக்கு கொண்டு வந்தனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாடு ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியும் காஸா மீது உக்கிரமுடன் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன் அமெரிக்க ராணுவ வீரர் ஆரோன் புஸ்னெல்(25)தீக்குளித்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளுக்கு நாள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள், குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இப்போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றன.எனவே 6 வார போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் காசவில் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த போர் நிறுத்தத் திர்மானம் இன்று இறுதியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தவிர யு.என்.எஸ்.சி-ல் மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கோரும் தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.