புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு அமெரிக்க அரசு திடீரென தடை விதித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சீரியஸ் 9, அல்ட்ரா 2 ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட் போன் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்த இரண்டு வகையான வாட்ச்களில் பயன்படுத்தியுள்ள பல்ஸ் ஆக்சிமீட்டர் தொழில்நுட்பதற்கான காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் காப்புரிமையை மாசிமோ என்ற நிறுவனம் கையகப்படுத்தி இருந்த நிலையில் மாற்றுத்திறன் தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்த கோரி பெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.