இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி வழங்கி உதவுமாறு அமெரிக்க அதிபரிடம் இந்தியா வம்சாவளி எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2.50 கோடியை தாண்டியுள்ளது. தினசரி பாதிப்புகள் சில நாட்கள் முன்னதாக 4 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு 6 கோடி தடுப்பூசிகள் வழங்கி உதவி செய்ய வேண்டும் என இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அமெரிக்கா உலக நாடுகளுக்கு 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகள் வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.