இந்தியா தற்போது இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக அமெரிக்க எம்.பி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகம் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதலாக எம்.பி பதவி வகித்து வந்தவர் ஆண்டி லெவின். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்த நிலையில் பதவி விலகினார்.
பதவி விலகும் முன்னர் பிரதிநிதிகள் சபையில் பேசிய அவர் இந்தியா குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதில் அவர் “இன்றைய நரேந்திர மோடியின் இந்தியா நான் காதலித்த இந்தியா இல்லை. நான் நேசிக்கும் நாட்டை நானே ஏன் விமர்சிக்க வேண்டும்? ஏனென்றால் நான் அந்த நாட்டை நேசிப்பதால் அங்குள்ள மக்கல் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர உறுதியாக இருக்கிறேன்.
மதசார்பற்ற நாடாக இருந்த இந்தியா தற்போது இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்கள் முஸ்லீம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என யாராக இருந்தாலும் கூட” என பேசியுள்ளார்.