அமெரிக்காவுக்கு மருந்துகள் கொடுத்ததற்காக இந்தியாவிற்கு அதிபர் ட்ரம்ப் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்து கேட்டிருப்பதாகவும், அதை தராத பட்சத்தில் பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து இந்தியாவிலிருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கையை பாராட்டி ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நல்ல புரிதலுடன் பேசியதாகவும், உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு இந்தியா எடுத்த முடிவுதான் அது என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.