அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு: 30 லட்சம் இந்தியர்களுக்கு விசா கிடைக்குமா?
அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு: 30 லட்சம் இந்தியர்களுக்கு விசா கிடைக்குமா?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் பயணம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பயணக்கட்டுப்பாடு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளிநாட்டினர் செல்வதற்கான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 8ஆம் தேதி முதல் அமெரிக்க அரசு ஒரு சில தளர்வுகளை அறிவிக்க இருப்பதாகவும் இதன் காரணமாக 30 லட்சம் இந்தியர்களுக்கு விசா கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட, அமெரிக்கா விசா வைத்துள்ளவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியுமென கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது