அமெரிக்காவில் இந்த ஆண்டில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று விர்ஜீனியாவில் கல்லூரி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பல பகுதிகளில் நடந்து வரும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தபோது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பிடிபட்டுள்ள நிலையில் அவர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. மேலும் சுடப்பட்ட மாணவர்களும் கால்பந்து அணியில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 600 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகமான சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.