Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: அதிரடி முடிவெடுத்த அமெரிக்க அதிபர்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (05:51 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற்போது, அதன் பிரச்சாரத்தில், 'பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.. இதன்படி தற்போது அதிபராக இருக்கும் அவர் பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



 


கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 195 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் குறித்து டிரம்ப் கூறியபோது, '“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்றதாக இல்லை” என்று குறிப்பிட்டதோடு, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்காக எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு இந்தியா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் அதிருப்தி தெரிவித்து பதிலளித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments