இன்றைய காலக்கட்டத்தில் இணையதள சேவை இல்லாமல் உலகமே இயங்காது என்றபடி உலகம் வேகமாக சுழன்றுவருகிறது.
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வருவதற்கு இணையதள சேவைகளின் பங்கு முக்கியமானது. கொரொனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடம் படிக்கவும், ஆன்லைன் மூலம் பரீட்சை எழுதவும் இது கூடுலாகப் பயன்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் திறமைகளை வெளிப்படுத்தும் ஊடகமாக சமூக வலைதளங்கள் உள்ளன.
இந்தியாவில் டிக்டாக் செயலி தடைவிதிக்கப்பட்டாலும் மற்ற நாடுகளில் அது செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த எரிகா ரிச்கோ ( 81 வயது). தான் இந்த வயதிலும் கட்டுக்கோப்பாக உடலை வைத்துக்கொள்வது எப்படி என்று தனது ஃபாலோயர்ஸ்க்கு காட்டுவதற்காக அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.