இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கியமான எச்சரிக்கையுடன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் நீண்ட காலமாக வாழும் இந்தியர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி, அமெரிக்காவில் 30 நாட்கள் மேல் தங்கும் அனைத்து வெளிநாட்டு குடியிருப்பாளர்களும் தங்கள் விவரங்களை அரசு வசம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. இந்த விதியை மீறுவோர், அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் எனக் கருதப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களது விசா ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விதி பற்றி கடந்த சில வாரங்களில் மூன்றாவது முறையாக வெளியான அறிவிப்பில், "உங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தங்கும் காலம் முடிந்தபின்னும் நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்வதற்கான அனுமதி நிரந்தரமாக மறுக்கப்படலாம்" எனவும் எச்சரிக்கையுடன் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலை, படிப்பு அல்லது குடியிருப்பு பெயரில் தங்கும் இந்தியர்கள் இந்த புதிய நடைமுறையை கவனத்துடன் பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது.