உலகின் மிகப்பெரிய வைரக்கல் ஏலத்திற்கு விடப்பட உள்ள நிலையில் முதன்முறையாக துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகில் ஏராளமான சுரங்கங்களில் பல்வேறு வகையான வைர கற்கள் கண்டறிப்படுகின்றன. அவ்வாறாக இதுவரை கண்டறியபட்டவற்றில் மிகப்பெரிய வைரக்கல்லாக இருப்பது தி ராக் என்ற வைரம். இது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரக்கல்லை கிறிஸ்டி என்ற நிறுவனம் முதல்முறையாக ஏலத்தில் விட உள்ளது. ஜெனிவா கொண்டு சென்று மே மாதத்தில் இந்த வைரம் ஏலத்திற்கு விடப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வைரத்தை துபாயில் மக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர். இந்த வைரம் சுமார் 228 கோடி விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது.