கத்தார் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் உலக சுகாதார மையம் கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியை காண்பதற்காக உலகெங்கிலுமிருந்து கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கத்தார் நாட்டில் குவிந்து வருவதால் அங்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் மட்டுமின்றி குரங்கு அம்மை மற்றும் ஒட்டக காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் கத்தார் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.