உலகின் மோசமான 50 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசமான நகரங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவை அதிகம் நடைபெறும் நகரங்களை கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது. இரண்டாவது இடத்தில் வெனிசுலாவின் கராகஸ் நகரம் உள்ளது.
மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3 வது இடத்தில், பிரேசிலின் நடால் நகரம் 4 வது இடத்தில், மெக்சிகோவின் டிஜூவானா 5 வது இடத்தில் உள்ளது.
லாபாஷ் (மெக்சிகோ) 6வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7 வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8 வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9 வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10 வது இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.