Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அந்த மாதிரி வீடியோக்களுக்கு தடை: யூடியூப் கறார்!!

அந்த மாதிரி வீடியோக்களுக்கு தடை: யூடியூப் கறார்!!
, வியாழன், 6 ஜூன் 2019 (10:09 IST)
யூடியூப் நிறுவனம் இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் விதமாக இருக்கும் வீடியோக்களை தடை செய்ய போவதாக அறிவித்துள்ளது. 
 
நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் யூடியூபில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது. இதனால் உலக தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிறுத்தினர். 
 
இதனை கணக்கில் கொண்டு யூடியூப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் யூடியூப் நிறுவனம், பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு இனம் உயர்ந்தது என சித்தரிப்பது போன்ற வீடியோக்கள் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 
 
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனுடைய முழுமையான மாற்றம் விரைவில் படிப்படியாக காணப்படும். அதற்கு சில மாதங்கள் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்கா தமிழிசை போட்ட டிவிட்: வரிந்துகட்டி திட்டி தீர்த்த டிவிட்டர் தம்பிகள்!!