Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவேயின் முன்னாள் அதிபர் காலமானார்...அதிபர் இரங்கல்...

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (18:22 IST)
ஜிம்பாவே நாட்டின்  முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 
ஜிம்பாவே நாட்டில் உள்ள ரோடிசா என்ற பகுதியில் பிறந்தார் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே. இவர் கடந்த 1963 ஆம் ஆண்டு , அப்போதைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக தஜிம்பாவே ஆப்பிரிக்கன் யூனியன் (Zimbabwe African National Union (ZANU) )என்ற கட்சியை தொடங்கினார்.
 
இதனையடுத்து அரசுக்கு எதிராகக் விமர்சித்த குற்றத்திற்காக  சுமார் 10 (1964 and 1974)ஆண்டுகள் இவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர் இவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதில் இவர் அமோகமாக வெற்றி பெற்று 1980 ஆம் ஆண்டு ’ஜிம்பாவே குடியரசின் ’ பிரதமர் ஆனார். அடுத்த 7 வருடங்கள் ஆட்சி நிர்வாகம் செய்தார்.
 
பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டில் இவர் ஜிம்பாவேயில் வெள்ளையர்களிடம் இருந்த நிலத்தை மீட்க பிரச்சாரம் செய்து, அதை மீட்டு கருப்பு ஜிம்பாவே மக்களிடம் கொடுத்தார். ஆனால் அங்கு பஞ்சம் தலைவிரித்தது.
 
அதன் பின்னர் ராபர்ட் தனது செல்வாக்கை பயன்படுத்தி, தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து ஆட்சியை தக்க வைக்க முயன்றார். ஆனால் அவரை பதவிவிலகச் சொல்லி வலியுறுத்தியதால், கடந்த 2017 ஆம் ஆண்டில் தனது 93 வயதில் பதவியை ராஜினாமா செய்தார். 
 
இந்நிலையில் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக, ஜிம்பாவே மக்களின் சுதந்திரம் நீதிக்காக குரல் கொடுத்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே (95) இன்று உயிரிழந்தார். 
 
இவரது மரணத்தை, அந்நாட்டின் தற்போதைய அதிபர்  எமர்சன் நாங்கவா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது  : பான் - ஆப்பிரிக்க மக்களின் சுதந்திரம் மற்றும் அதிகாரமளித்தலுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்த ராபர்ட் முகாபே இன்று உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments