Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2022ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு அட்டர் பிளாப் ஆன திரைப்படங்கள்!

Advertiesment
2022
, சனி, 24 டிசம்பர் 2022 (10:18 IST)
2022ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு அட்டர் பிளாப் ஆன திரைப்படங்கள்!
 
ஒவ்வொரு வருடமும் 20க்கு மேற்பட்ட திரைப்படங்கள் கோலிவுட் சினிமாவில் வெளியாகும். அதில் ஹிட் அடித்து வசூல் குவிப்பது ஒரு சில படங்கள் தான். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் உருவாகி எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றிபெறும் திரைப்படங்கள் குறித்து நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். தற்போது 2022ம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி அட்டர் பிளாப் ஆன டாப் 10 திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 
 
வீரமே வாகை சூடும்
2022
 
இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியான திரைப்படம் வீரமே வாகை சூடும். சாதாரண மனிதனுக்கும் அரசியல்வாதிக்கும்  இடையே நடக்கும் பிரச்சனையை ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கொண்டு சொல்லும் படம் தான் இது. இப்படத்தை விஷால் தனது விஷால் ஃபிலிம் பேக்டரி (VFF) நிறுவனம் மூலம் தயாரித்து பெரும் நட்டத்தை அடைந்தார். 
 
வீரபாண்டியபுரம்
2022
நடிகர் ஜெய் இசையமைத்து இந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி வெளியான திரைப்படம் வீரபாண்டியபுரம். சுசீந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தில் ஜெய் நடித்திருந்தார். இரண்டு கிராமங்களுக்கு இடையே உள்ள தீராத பகையால் ஒருவர் மாற்றி ஒருவர் வெட்டிக்கொள்கின்றனர். பின்னர் ஜெய்க்கு எதிர்க்கிராமத்து பெண்ணுடன் காதல் வர அது சேர்ந்ததா, அத்தோடு பகை தீர்ந்ததா என்பதே கதை. இந்த படம் பெரிதாக மக்கள் கவனத்தை பெறவில்லை. 
 
கொம்பு வச்ச சிங்கம்டா
2022
பிரபாகரன்  இயக்கத்தில்  சசிகுமார் நடிப்பில் இந்த 2022ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா. அதிரடி நகைச்சுவை படமான இதில் மடோனா செபஸ்டியன் , சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் தினத்தில் வெளியாகிற  அளவுக்கு இந்த படம் மக்களை அப்படி ஒன்றும் ரசிக்க வைக்கவில்லை 
 
இடியட்  
2022
ராம்பாலா இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியான ஹாரர் காமெடிய திரைப்படம் இடியட். இப்படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காமெடி நட்சத்திரங்கள் ஒன்று கூடியதால் டார்லிங் படம் போன்று இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்ளுக்கு இடியட் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. 
 
ஐங்கரன்
2022
ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ஐயங்கரன். ரவி அரசு எழுதி இயக்கிய இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் ஹரீஷ் பேரடி உள்ளிட்ட துணை நடிகர்களுடன் மஹிமா நம்பியார் நடித்திருந்தார்.  மூன்று வருட தாமதத்திற்குப் பிறகு படம் வெளியான இப்படம் படக்குழுவுக்கு பெரும் நஷ்டத்தை ஈட்டி செய்தது  தான் மிச்சம். 
 
ஹே சினாமிகா  
2022
2022 ஆம் ஆண்டு வெளியான அழகிய காதல் திரைப்படம் ஹே சினாமிகா.  மதன் கார்க்கி எழுதிய இப்படத்தை பிருந்தா இயக்கியிருந்தார். துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் சந்திப்பிலேயே துல்கர் சல்மான், அதிதி ராவ், காதலில் விழுந்து திருமணம் செய்துகொள்கின்றனர். 2 ஆண்டு இல்லற வாழ்வுக்கு பின் சலிப்படைந்த அதிதி கணவனை பிரிய காரணம் தேடி காஜல் அகர்வாலை பொய்யாக காதலிக்க சொல்லி உதவிகேட்கிறார். அவர்களுக்குள்,நல்ல உறவு செல்கிறது பின்னர் அதை பார்த்து பொறாமைப்பட்டு மீண்டும் தன் கணவனை அடைய அதிதி முயற்சிக்கிறார். துல்கர் அவரை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதே கதை. நல்ல கதை, சிறப்பான நடிப்பு இருந்தும் படம் பிளாப் ஆனது தான் வருத்தம். 
 
மாமனிதன் 
2022
சீனு இராமசாமி எழுதி இயக்கி வெளியான படம் மாமனிதன்.  சமூக அக்கறை கொண்டுள்ள ஜனரஞ்சகமான குடும்பத்திரைப்படமான இது 4 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியானது. இப்படம் ரசிகர்கள் பிடித்த படமா அமையவில்லை. இது விஜய் சேதுபதியின் கேரியரையும் பின்னுக்கு தள்ளியது. 
 
கடைசி விவசாயி 
2022
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. எண்பத்தைந்து வயது விவசாயி நல்லாண்டி என்பவரின் வாழ்வியலை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, முனீஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். திரைபிரபலங்கள் பெரிதும் பாராட்டிய இப்படம் வெற்றியை அடையாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. 
 
மன்மத லீலை 
2022
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே நடித்து வெளியான படம்  மன்மத லீலை. இளைஞர்கள் கொண்டாடும் கில்மா படமாக உருவான இது அவர்களை திருப்திப்படுத்தவில்லை. 

கார்பன்
2022
2022 ஆம் ஆண்டு வெளிவந்த மொக்கை படங்களில் ஒன்று கார்பன். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த இப்படத்தை ஸ்ரீனுவாசன் எழுதி இயக்கியிருந்தார்.  விதார்த் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்த இப்படம் போகி பண்டிகைக்கு வெளியாகி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவை சேர்ந்த போலோ வீராங்கணை மரணம்: பின்னணி என்ன?