விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள் என்றாலே இனிப்புக்காரங்கள் வீட்டிலேயே பலரும் செய்வார்கள். அதில் பலருக்கும் ஓமப்பொடி விருப்பமானது. கடைகளில் அதிகம் விற்கும் ஓமப்பொடியை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்..
Various source
தேவையான பொருட்கள்: கடலைமாவு – 2 கப், ஓமம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன், வெண்ணெய் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு
ஓமத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்
அதனுடன் ஓமம், தண்ணீர், வெண்ணெய் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
Various source
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் மாவை முறுக்கு பிழியில் ஓமப்பொடி அச்சு வைத்து பிழியவும்.
Various source
நன்றாக முறுக்கு போல பொறிந்து வந்ததும் அதை எடுத்து அதனுடன் எண்ணெய்யில் வறுத்த கறிவேப்பிலையை தூவினால் சுவையான ஓமப்பொடி தயார்.