சத்தான முருங்கைக்கீரை பருப்பு அடை ஈஸியா செய்யலாம்!

கீரை வகைகளில் இரும்பு சத்து மிகுந்த முருங்கைக் கீரையானது கண் பார்வைக்கு நல்லது. முருங்கைக் கீரையை வைத்து சத்தான சுவையான பருப்பு அடை செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம்,

தேவையான பொருட்கள்: வரமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு

பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Various source

அரைத்த மாவில் நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், வெங்காயம், பூண்டு, முருங்கை கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை பருப்பு அடை தயார்.

உடலுக்கு நலம் தரும் சிறுதானிய இட்லி செய்வது எப்படி?

Follow Us on :-