சூப்பரான கிராமத்து அப்பம் வீட்டிலேயே செய்ய ஈஸி ரெசிபி!
கிராமங்களில் பிரபலமாக உள்ள உணவுகளில் பனியாரம், அப்பம் போன்றவை பலருக்கும் விருப்பமானவை. பனியாரத்தை விட பெரிய சைஸில் பொறித்து எடுக்கப்படும் அப்பத்தின் சுவைக்கு ஈடே கிடையாது. சுவையான கிராமத்து ஸ்டைல் அப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: 2 கப் பச்சரிசி, ஒன்றரை கப் வெல்லம், ஒரு வாழைப்பழம், ஏலக்காய், உப்பு தேவையான அளவு
பச்சரிசி, கடலை பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து வாழைப்பழம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி அதை அரைத்த மாவில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கூடவே பொடித்த ஏலக்காய், உப்பு தேவையான அளவு சேர்த்து கெட்டியாக மாவை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் எண்ணெய் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி நல்ல சூடு வந்ததும் மாவு கரண்டில் கொஞ்சமாக மாவை எடுத்து பொரிக்க வேண்டும்.
அப்பம் பொரிந்து வரும்போது அடிக்கடி இரு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறம் வந்ததும் எடுக்க வேண்டும்.