இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் சரிந்துள்ளது. ஆனால் இந்த சரிவு நிரந்தரமானது அல்ல என்றும் இன்னும் சில மணி நேரத்தில் சென்செக்ஸ் உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 575 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 39 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டிற்கு பங்குச்சந்தை நன்றாக கைகொடுக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.