Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் திடீர் திருப்பம்: 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (07:53 IST)
இந்தியாவில் கிட்டத்தட்ட முக்கிய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியும் சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது




பிரதமர் பதவியில் மோடி அமர்ந்தவுடன் பாஜகவினர் சவால் விட்ட ஒன்று காங்கிரஸ் கட்சியை அனைத்து மாநிலங்களிலும் இருந்து துரத்துவோம் என்பதுதான். அதன்படி அமித்ஷா யோசனையின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்க, அதை பாஜக கைப்பற்றுவதுமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த லிஸ்ட்டில் தமிழகமும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து தோல்வியால் துவண்டு போய் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக வடகிழக்கு மாநிலமான ,மணிப்பூர் மாநில காங். எம்.எல்.ஏ.க்கள் 4கு பேர் பா.ஜ.விற்கு தாவி உள்ளனர். மணிப்பூரில் நடந்த சட்டசபையில் பா.ஜ. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த பிரைன்சிங் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ராகுல்காந்தியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments