Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரசொலி பவள விழாவில் கமல் பேசியது என்ன?

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (00:15 IST)
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் பவள விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:  



 


"நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது. அதன் பின்னர், அந்தத் தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று தெரிந்தது முதல் நான் அவரின் ரசிகன். இந்த விழாவில் என்னை அழைத்தபோது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறார பேசுகிறாரா? என்று கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். 
 
இப்போது தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம். இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்றதுமே, நீங்க கழகத்தில் சேரப் போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். சேருவது என்றால் 1989-ல் கலைஞர் அழைத்தபோதே சேர்ந்திருப்பேன். அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை. 
 
ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இங்கு ஒரே மேடையில் இருக்கிறார்கள். இந்தக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் நான் இங்கு வந்தேன். திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை. சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது. 'ஜனகனமன'யில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும் திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் ஆன்லைன் மூலம் மட்டுமே டெண்டர்.. இந்து சமய அறநிலையத்துறையின் அதிரடி முடிவு..

அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது.. சிலர் நாட்டை விட்டும் வெளியேற்றம்...

த்ரிஷாவிடம் உதயநிதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு பதிவு

இன்று முதல் டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைனில் புக் செய்யலாம்.. இனிமேல் லைனில் காத்திருக்க வேண்டாம்...

கரைபுரண்டு ஓடும் காவிரி!.. இன்னைக்கும் ஒகேனக்கல் போகாதீங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments