மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றே மத்திய அரசு ஜி.எஸ்.டியை குறைத்ததாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அமுல்படுத்திய ஜி.எஸ்.டி-க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இறங்கி வந்த மத்திய அரசு சமீபத்தில் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-ஐ குறைத்தது.
இந்நிலையில், நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை “சசிகலா உறவினர்களிடம் நடத்தப்பட்டு வரும் வருமான வரி சோதனை குறித்து என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது. அதேபோல், அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஜி.எஸ்.டியில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. தற்போது, அவை நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னர் விடுத்த கோரிக்கைகளை ஏற்றே ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு இருப்பதாக புரிந்துகொள்ளலாம் எனவும் இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.