Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

Advertiesment
tvk vijay

BALA

, புதன், 26 நவம்பர் 2025 (11:07 IST)
நடிகர் விஜய் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கிய பின்பு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வந்தார். அப்படி செல்லும் வழிகளில் அவரே எதிர்பார்க்கவில்லை என்றாலும் அது ரோட் ஷோ போலவே நடந்தது.

அவர் வானகத்தின் உள்ளே அமர்ந்திருந்தும் அவரைக் காண வழியெங்கும் பொதுமக்களும், ரசிகர்களும், தவெக தொண்டர்களும் குவிந்தார்கள். அதிலும் பல பேர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் விஜயின் வாகனத்திற்கு பின்பும், முன்பும் அவரை பின்தொடர்ந்தார்கள்.

இதன் காரணமாகத்தான் அவர் நாமக்கல்லில் இருந்து கருரூக்கு செல்ல பல மணி நேரம் தாமதமாக அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் மரணனடைந்தனர். இதிலிருந்து இப்போதுதான் தாவெக மீண்டுள்ளது. ஒருபக்கம், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை துவங்க திட்டமிட்டார் விஜய். இதற்காக சேலத்தில் அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களை சொல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே தேதி மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் டிவிஸ்ட்டாக அதே டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருக்கிறார் விஜய்.

இதற்காக புதுச்சேரி காவல்துறையிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி காலாபட்டில் தொடங்கி கன்னியக்கோவில் பகுதி வரை ரோட் ஷோ நடக்கும் எனத் தெரிகிறது. மேலும் உப்பளத்தில் விஜய் பேசுவார் எனவும் சொல்கிறார்கள். டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விஜய் ரோட் ஷோ நடத்த போலீசாரிம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!