Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு ஊசி கூட உடன் வராது

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (13:04 IST)
பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற குருநானக் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் குருநானக் தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.



 
இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்தை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள், என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த குருநானக் ரொம்ப நல்லது அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே என்று கேட்டார்.

“என்ன சுவாமி எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் . செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.

தன் கையில் இருந்து ஊசி ஒன்றை எடித்த குருநானக், அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்” என்றார் குருநானக்.

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வரமுடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த குருநானக், இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே....ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும், என்று அறிவுரை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாசி மாதத்தில் வரும் மஹாசிவராத்திரி குறித்த சிறப்பு தகவல்கள்..!

அங்காளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கோலாகலம்..!!

மகாசிவராத்திரி தோன்ற காரணமான பிரம்மன், விஷ்ணு..! – மகாசிவராத்திரி வரலாறு!

இந்த ராசிக்காரர்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்! – இன்றைய ராசி பலன்கள்(05.03.2024)!

குருவை வணங்கினால் கோடி பலன்கள்: குருபகவானை வணங்க உகந்த நாள் எது

அடுத்த கட்டுரையில்
Show comments