Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க....!

உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க....!
யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட, எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக, கெட்ட சக்திகள் நீக்க முடியும் என கூறப்படுகிறது. அதை பார்ப்போம்.
 
1 இந்த ட்ரிக்கை ஞாயிறுகளில் மட்டும் முயற்சி செய்ய வேண்டாம். இந்த ட்ரிக்கை செய்ய நீங்கள் கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீட்டை முழுக்க கழுவ  வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம்.
 
2 ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்க. இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யுமாம். இந்த ட்ரிக்கை செய்யும் போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க  வேண்டுமாம்.
 
3 உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு பவுலில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான  இடைவேளையில் நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்க உதவுமாம்.
 
4.சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி  நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.
 
5 சாப்பிடும் டேபிளில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்.
 
6 குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியுமாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்கள் சேர்த்து கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி விழா