Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (18:32 IST)
டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன் -  லாப ஸ்தானத்தில்   சுக்ரன், குரு, சனி , கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உழைப்பதற்கு அஞ்சாத கும்பராசியினரே, நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல் படுவீர்கள். இந்த மாதம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்

பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.  எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவமணிகள் ஆர்வமுடன் படிப்பில் இருப்பார்கள். நல்ல நடவடிக்கைகளும், ஆற்றலும் நிறைந்து காணப்படுகிற காலகட்டமென்பதால் அனைவரிடமும் நற்பெயர் எடுக்க முடியும். தேவைகள் நிறைவேறும்.

சதயம்:
இந்த மாதம் மன குழப்பம் நீங்கி தெளிவான  சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும். அரசியல் துறையினர் நல்ல ஆதாயத்தை பெறுவீர்கள். உங்கள் பேச்சுக்கு வலிமை நிறைந்து காணப்படும். தொண்டர்களின் பணிகளை கண்டு ஆச்சரியமடைவீர்கள். சிலரின் செயல்பாடுகள் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு காத்திருக்கிறது. அத்தனை வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். கவலை வேண்டாம். அலுவலகத்தில் அனைவரும் உங்களுக்கு பச்சைக் கொடி காட்டுவார்கள்.

பரிகாரம்: தினமும் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments